News May 28, 2024

அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு

image

மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்றுடன் நிறைவைடைகிறது. இந்த ஆண்டு அக்னி தொடங்கும் முன்பிருந்தே, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஏப்ரல் மாதத்திலே பல்வேறு இடங்களில் வெயில் சதமடித்திருந்தது. தென் மாவட்டங்கள் மழை பெய்தாலும், வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. இந்நிலையில், அக்னி வெயில் இன்றுடன் முடிவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Similar News

News March 5, 2026

வேலூர்: ஆட்சியர் இன்று கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்!

image

வேலூர் மாவட்டம் காட்பாடி விருதம்பட்டு பகுதியில் இன்று(மார்ச் 5) காலை 10 மணி அளவில் செல்ஃபி பாயின்டை கலெக்டர் சுப்புலட்சுமி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து 10:30 மணியளவில் காட்பாடி செங்குட்டை பகுதியில் ரிங் ரோடு அமைக்க அடிக்கல் நாட்டுகிறார். இதில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 5, 2026

BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹640 குறைந்தது

image

தங்கம் விலை இன்றும் (மார்ச் 5) மளமளவென குறைந்துள்ளது. இதன்படி, 1 கிராம் தங்கம் ₹80 குறைந்து ₹15,120-க்கும், 1 சவரன் ₹640 குறைந்து ₹1,20,960-க்கும் விற்பனையாகிறது. போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வரும் அதே வேளையில், இந்திய சந்தையில் தங்கம் விலை குறைந்து வருகிறது.

News March 5, 2026

போர் பதற்றம்.. தொடரை தள்ளிவைத்த ICC!

image

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலின் காரணமாக, நேபாளத்தின் கீர்திபூரில் நடைபெற இருந்த ODI WC லீக்-2 தொடரின் 6 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ODI உலகக்கோப்பை தகுதிச்சுற்றுக்காக நடத்தப்படும் இந்த தொடரில் நேபாளம், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோத இருந்தன. தொடர் நடைபெறும் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ICC அறிவித்துள்ளது.

error: Content is protected !!