News August 20, 2025
அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி

இண்டர்மீடியட் ரேஞ்ச் பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-5’ சோதனை வெற்றி அடைந்ததாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. ஒடிஷாவின் சந்திப்பூர் சோதனைக் களத்தில் இச்சோதனை நடந்தது. செயல்பாட்டு, தொழில்நுட்ப ரீதியாக அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இச்சோதனை இருந்தது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய ஏவுகணை இந்திய ராணுவத்தின் பலத்தை மேலும் கூட்டும் என பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 13, 2026
இனி 10 நிமிட டெலிவரி கிடையாது!

பணி பாதுகாப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகள் முன்வைத்து, ஆன்லைன் நிறுவனங்களின் டெலிவரி ஊழியர்கள் கடந்த டிசம்பரில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தினர். இதையடுத்து 10 நிமிட டெலிவரி சேவையை நிறுத்த வேண்டும் என அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இந்நிலையில், 10 நிமிட டெலிவரி விளம்பரத்தை நிறுத்த டெலிவரி நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது டெலிவரி ஊழியர்களுக்கு சற்று நிம்மதியை தரும்.
News January 13, 2026
ஜன.20-ல் திமுக மா.செ., கூட்டம்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், ஜன.20-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொ.செ., துரைமுருகன் அறிவித்துள்ளார். இதில், தேர்தல் களம் எப்படி உள்ளது, பூத் வாரியான கருத்தரங்கங்கள் குறித்த நிலவரம், தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 13, 2026
பாஜக தேசிய தலைவராகும் நிதின் நபின்

BJP-ன் அடுத்த தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜன.19-ல் அவர் மனு தாக்கல் செய்வார் என்றும், போட்டியில்லாத நிலையில் ஜன.20-ல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் நடக்கும் இந்நிகழ்விற்கு பாஜக CM-கள், மாநில தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நபின் தற்போது BJP-ன் தேசிய செயல்தலைவராக உள்ளார்.


