News January 8, 2025

Age is just a number…82 வயதில் சாதித்த மூதாட்டி

image

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் கோவையைச் சேர்ந்த மூதாட்டி தங்கம் வென்று அசத்தியுள்ளார். 82 வயதான கிட்டம்மாளுக்கு, தனது பேரன்கள் உடற்பயிற்சி செய்வதை கண்டு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டுள்ளது. வார இறுதி நாள்களில் உடற்பயிற்சி மேற்கொண்ட அவர், டெல்லியில் ‘நேச்சுரல் ஸ்ட்ராங் பவர்லிப்டிங் பெடரேசன்’ சார்பில் நடந்த பளு தூக்கும் போட்டி பங்கேற்றார். 50 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Similar News

News February 22, 2026

மகாராஷ்டிரா மகளிர் உரிமை தொகை.. 90 லட்சம் பேர் நீக்கம்

image

மகாராஷ்டிராவில் சுமார் 90 லட்சம் பயனாளிகள் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 2024-ல் சுமார் 2.43 கோடியாக இருந்த எண்ணிக்கை தற்போது 1.57 கோடியாக குறைந்துள்ளது. e KYC சரிபார்ப்பு, தகுதியின்மை, விண்ணப்பப் படிவங்களில் உள்ள குழப்பமான கேள்விகள் ஆகியவையே பயனாளிகள் நீக்கப்பட்டத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. உதவித் தொகை பெண்களுக்கு மாதம் ₹1,500 வழங்கப்பட்டு வருகிறது.

News February 22, 2026

வரலாற்றில் இன்று

image

*1898 – தென்னாப்பிரிக்காவில் இந்தியர்கள் உரிமைக்கான போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்த தினம். *1936 – தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர் & பேச்சாளர் சாலமன் பாப்பையா பிறந்த தினம். *1944 – இரண்டாம் உலகப் போரில் அமெரிக்க வான்படையினர் தவறுதலாக 4 டச்சு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியதில் 800-க்கும் அதிகமானோர் இறந்தனர். *1944 – காந்தியின் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மறைந்த நாள். *இன்று உலக சிந்தனை தினம்.

News February 22, 2026

நார்ச்சத்து உணவுகளின் நன்மைகள்

image

பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளன. நார்சத்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை தருகின்றன. *செரிமானத்துக்கு உதவி செய்கின்றன *மலச்சிக்கலை தடுக்கின்றன *உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. *இதய நோய் அபாயத்தை குறைக்கிறது *ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கிறது *நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து, பெருங்குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

error: Content is protected !!