News August 8, 2024
சச்சினுக்கு பிறகு ரோஹித்

இலங்கைக்கு எதிரான தொடரை இழந்த மோசமான சாதனையை, 27 ஆண்டுகளுக்கு பிறகு ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி படைத்துள்ளது. இதற்குமுன், 1997ஆம் ஆண்டு, சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணியிடம் ஒருநாள் கிரிக்கெட் தொடரை இழந்தது. அதற்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்ததில்லை என்ற நிலையில், இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Similar News
News December 21, 2025
கூட்டணியை உறுதி செய்தார்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாஜக செயல் தலைவர் நிதின் நபினை சந்தித்த பிறகு NR காங்கிரஸ், NDA கூட்டணியில் தொடர்வதாக CM ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் NDA கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, நிதி ஒதுக்கீடு பிரச்னை ஆகியவற்றால் அதிருப்தியில் இருக்கும் ரங்கசாமி NDA கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், இன்று கூட்டணியை உறுதி செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
News December 21, 2025
பரிதாப நிலையில் இங்கிலாந்து

<<18628855>>ஆஷஸ் டெஸ்ட்<<>> தொடரில் ஏற்பட்ட ஹாட்ரிக் தோல்வி காரணமாக இங்கிலாந்து அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அடிலெய்ட் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ஐசிசி வெளியிட்ட WTC புள்ளிகள் பட்டியலில் 26 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு ENG அணி தள்ளப்பட்டுள்ளது. AUS 72 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தால், ENG அணி இன்னும் மோசமான சரிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
News December 21, 2025
திமுக ஆட்சியில் துயரத்தில் மக்கள்: OPS

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என OPS கண்டனம் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அவர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


