News April 22, 2024
4 ஆண்டு பட்டப்படிப்பு முடித்தால் Ph. D சேரலாம்

4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பில் 75% மதிப்பெண் பெற்றவர்கள் நேரடியாக Ph. D படிப்பில் சேரலாம், நெட் எழுதலாம் என பல்கலை. மானிய குழு அறிவித்துள்ளது. Ph. D ஆய்வுப்படிப்பில் சேர முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், நெட் தேர்வு எழுத குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில், 4 ஆண்டுகள் இளங்கலைப் பட்டம் பெற்றவர்களுக்கு இந்த விதிமுறைகளை யுஜிசி தளர்த்தியுள்ளது.
Similar News
News January 9, 2026
தொகுதி பங்கீடு குறித்து இன்று அதிமுக – பாஜக ஆலோசனை

அதிமுக – பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் EPS முக்கிய ஆலோசனை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக இன்று EPS-ஐ அவரது வீட்டில் வைத்து நயினார் நாகேந்திரன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தொகுதி பங்கீடு, கூட்டணி விரிவாக்கம், பரப்புரை திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
News January 9, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 9, மார்கழி 25 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்:9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்:10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்:3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சஷ்டி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்
News January 9, 2026
‘பராசக்தி’ நாளை வருவது உறுதி

‘ஜனநாயகன்’ போல் ‘பராசக்தி’ படத்திற்கும் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் படம் திட்டமிட்டபடி நாளை திரைக்கு வரும் என தயாரிப்பு நிறுவனம் உறுதியாக தெரிவித்துள்ளது. சென்சாரில் சொல்லப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் இன்று ‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.


