News April 16, 2024
ஆட்சிக்கு வந்ததும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்!

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், நாட்டை அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் தொலைநோக்குப் பார்வையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. தோல்வி பயத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் பாஜகவின் செயல்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கின்றன எனக் கூறினார்.
Similar News
News November 19, 2025
தேர்தல் வெற்றிக்கு ₹40,000 கோடி செலவா?

பிஹாரில் NDA கூட்டணி மீதான பிரசாந்த் கிஷோரின் குற்றச்சாட்டுகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் முதல் தேர்தல் அறிவிப்பு வரை சுமார் ₹40,000 கோடிக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டதாகவும், உலக வங்கி உதவியுடன் ₹14,000 கோடி அளவுக்கு திட்டங்களுக்கு பணம் திருப்பி விடப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். தேர்தலுக்கு ஒருநாள் முன்புவரை கூட பெண்களின் வங்கிக் கணக்கில் ₹10,000 செலுத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்.
News November 19, 2025
ராசி பலன்கள் (19.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 18, 2025
FLASH: அல்-ஃபாலாஹ் பல்கலை., சேர்மன் கைது

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 டாக்டர்கள் ஹரியானாவிலுள்ள அல்-ஃபலாஹ் பல்கலை.,யுடன் தொடர்புடையவர்கள். இந்நிலையில், அதன் நிறுவனர் ஜே.ஏ.சித்திக் என்பவரை ED கைது செய்துள்ளது. யுஜிசி அங்கீகாரம் தொடர்பாக பொய்யான தகவலை அளித்தது, நிதி மோசடி குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு இவர் நிதியுதவி செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.


