News April 17, 2025

5 ஆண்டுகளுக்கு பிறகு.. DC-யின் மாஸ் ரெக்கார்ட்!

image

18 வருட IPL வரலாற்றில் சூப்பர் ஓவரில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற சாதனையை DC அணி படைத்துள்ளது. இதுவரை 5 சூப்பர் ஓவர்களில் விளையாடி, அவற்றில் 4-ல் DC(முன்னர் Delhi Daredevils) வெற்றி பெற்றுள்ளது. இந்த பட்டியலில் PBKS அணி, 3 வெற்றிகளை பெற்று 2-வது இடத்தில் உள்ளது. நேற்றைய மேட்ச் யாரு பாத்தீங்க?

Similar News

News November 8, 2025

டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள்.. நம்பர் 1 எது பாருங்க

image

ஆசியாவில் மிகவும் மகிழ்ச்சியான நகரம் எது தெரியுமா? நம்பர் 1 இடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். ஆசிய நகரங்களில் 18,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களிடம் டைம் அவுட் நடத்திய கணக்கெடுப்பின்படி, 2025-ம் ஆண்டிற்கான ஆசியாவின் டாப் 10 மகிழ்ச்சியான நகரங்கள் பட்டியிடப்பட்டுள்ளன. அவை என்னென்ன நகரங்கள் என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT

News November 8, 2025

சீமானின் பொது சேவை தொடர EPS வாழ்த்து

image

சீமானின் பிறந்தநாளையொட்டி EPS அவருக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள் மற்றும் உடல் நலத்துடன், தொடர்ந்து பொது சேவையாற்றிட இறைவனை வேண்டுவதாக, தனது X பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அரசியலில் எதிர் எதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும், அவரின் மீது உள்ள தனிப்பட்ட மரியாதையின் காரணமாக EPS வாழ்த்து தெரிவித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

News November 8, 2025

இந்திய நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி

image

இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது, உலக வங்கி தடை விதித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. மேலும், உலக வங்கியின் நிதியுதவி பெறும் எந்த திட்டத்திலும் 2029-ம் ஆண்டு வரை இந்த நிறுவனம் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!