News February 26, 2025
25 ஆண்டுகள் கழித்து.. அஜித்துடன் நடிக்கும் ஷாலினி?

25 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் ஷாலினி நடிக்க இருப்பதாக செய்தி வைரலாகி வருகிறது. குட் பேட் அக்லி டீசர் அறிவிப்பு வீடியோவில், ஒரு பங்களா காட்டப்பட்டது. அதே பங்களா முன்பு போட்டோ எடுத்து அதை ஷாலினி வெளியிட்டுள்ளார். ‘இவுங்க எதுக்கு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போணும்… ஒருவேள இருக்குமோ’ என ரசிகர்கள் கேட்க தொடங்கி விட்டனர். ஷாலினி 2001ல் பிரியாத வரம் வேண்டும் படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
Similar News
News February 26, 2025
‘ஹிந்தி’யை பயன்படுத்தாத விஜய்

தவெகவின் 2ம் ஆண்டு விழாவில் உரையாற்றிய விஜய் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பேசினார். மத்திய, மாநில அரசுகள் சண்டை போடுவது போல நடித்து மக்களுடன் விளையாடுவதாக சாடினார். வேற்று மொழியை திணித்தால் நிச்சயம் ஏற்கவே முடியாது என கூறிய விஜய், ஒரு இடத்தில் கூட ஹிந்தி என்ற சொல்லை பயன்படுத்தவில்லை. வார்த்தைக்கு கூட பயன்படுத்தக்கூடாது என நினைத்தாரோ என்னவோ? கமெண்ட் பதிவு செய்யுங்கள்.
News February 26, 2025
இன்று இரவு இந்த 1 மணி நேரம் தூங்காதீர்கள்

மகா சிவராத்திரியான இன்று இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள், இரவு 12 – 1 மணி வரையாவது விழித்திருங்கள். இது மிக முக்கியமான நேரம். இந்த நேரத்திற்கு லிங்கோத்பவ நேரம் என பெயராகும். சிவன், தன்னை லிங்கோத்பவராக வெளிக்காட்டிய நேரமும் இதுதான். பார்வதி, சிவபெருமானை நோக்கி பூஜித்த நேரமும் இதுதான். அதுமட்டுமில்லாமல், இந்த பிரபஞ்சத்தோட மொத்த சக்தி ஆற்றலும் இந்த பூமியை நோக்கி வரும் நேரமும் இதுதான்.
News February 26, 2025
மத்திய அரசில் 1,161 Vacancy: ₹69,100 வரை சம்பளம்!!

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் (CISF) 1,161 காலிப்பணியிடங்கள் உள்ளன. கான்ஸ்டபிள் வேலைக்கு ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ₹69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களை அறிய <