News August 6, 2024

ஓட்டப்பந்தயத்தில் கலக்கும் ஆப்பிரிக்கர்கள்

image

ஒலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், அனைவருமே 10 விநாடிகளுக்குள் ஓடி சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பிடித்தவர் 9.7 விநாடிகளில் இலக்கை எட்டிய நிலையில், கடைசி இடம் பிடித்தவர் 9.9 விநாடிகளில் இலக்கை அடைந்தார். இவர்கள் அனைவருமே வெவ்வேறு நாட்டினை சேர்ந்தவர்களாக பதிவு செய்திருந்தாலும், அனைவருமே ஆப்பிரிக்கர்கள் அல்லது ஆப்பிரிக்க வழித் தோன்றல்கள்.

Similar News

News March 23, 2026

குவாரியில் சடலம்.. திமுக MLA மீது எதிர்கட்சிகள் சந்தேகம்

image

திண்டுக்கல் நத்தம் அருகே உள்ள கல்குவாரியில் அழுகிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த குவாரி திமுக MLA பழனியாண்டிக்கு தொடர்புடையது என்ற தகவல், இளைஞரின் மரணத்தில் சந்தேகம் எழுப்புவதாக அண்ணாமலை சாடியுள்ளார். அதேபோல், ஏற்கெனவே பத்திரிகையாளரை கடத்திச் சென்று பழனியாண்டி தாக்கியதையும் போலீஸ் கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

News March 23, 2026

விஜய்யை எதிர்த்து தேர்தல் மன்னன் பத்மராஜன் போட்டி

image

சேலத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், 1988 முதல் இதுவரை 252 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். கருணாநிதி, ஜெயலலிதா முதல் முர்மு வரை அனைவருக்கு எதிராகவும் அவர் வேட்புமனுவை அளித்துள்ளார். இதுவரை ₹1.50 கோடி வரை தேர்தலுக்காக செலவிட்டுள்ளதாக கூறும் அவர், மீண்டும் 253-வது முறையாக மேட்டூரில் போட்டியிடவுள்ளாராம். மேலும், விஜய் நிற்கும் தொகுதியில் அவரை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளாராம்.

News March 23, 2026

அனைத்து குடும்பங்களுக்கும் ₹10,000.. உறுதி அளித்தார்

image

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் EPS போடவுள்ள முதல் 3 கையெழுத்தை பற்றி பொள்ளாச்சி ஜெயராமன், பேசியுள்ளார். கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், CM ஆனதும் அனைத்து குடும்பங்களுக்கும் ₹10,000 வழங்கும் ஃபைலில் தான் EPS முதலில் கையெழுத்திடுவார் என உறுதி அளித்துள்ளார். மேலும், மகளிர் உரிமைத் தொகையாக ₹2,000, முதியோர் ஓய்வூதியமாக ₹2000 வழங்கும் ஃபைல்களில் அடுத்ததாக EPS கையெழுத்திடுவார் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!