News June 27, 2024
56 ரன்களில் சுருண்டது ஆஃப்கானிஸ்தான்

டி20 உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் வெறும் 56 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஃப்கானிஸ்தான் அணி இழந்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது ஆஃப்கன். ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக யான்சென் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Similar News
News August 24, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் ஒருநாள் விடுமுறை..

கடந்த 2 நாள்களாக விடுமுறையில் இருக்கும் மாணவர்களுக்கு, அடுத்த 2 நாள் கழித்து மீண்டும் விடுமுறை வருகிறது. ஆம்!, நாளை, நாளை மறுநாள் என 2 நாள்கள் மட்டுமே பள்ளிகள் இயங்கும். புதன்கிழமை (27-ம் தேதி) விநாயகர் சதுர்த்தி வருவதால், அன்று அரசு விடுமுறையாகும். 27-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் அனைத்திற்கும் மாநிலம் முழுவதும் விடுமுறையாகும்.
News August 24, 2025
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

இன்று காலை 10 மணியில் இருந்து Airtel நெட்வொர்க் சேவை ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுமார் 7,000 பேர் X உள்ளிட்ட சோஷியல் மீடியாக்கள், ஏர்டெல் சேவை மையங்களில் புகாரளித்து வருகின்றனர். இதனையடுத்து, சேவையை மீட்டெடுக்க நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரமும் சில இடங்களில் ஏர்டெல் நெட்வொர்க் சேவை பாதிக்கப்பட்டது.
News August 24, 2025
அமித்ஷாவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசா

சமஸ்கிருதத்துக்கு நிதியை அள்ளிக் கொடுத்து விட்டு, தமிழ் மொழிக்கு நிதி ஒதுக்க மனமில்லை என்று மத்திய பாஜக அரசை ஆ.ராசா விமர்சித்துள்ளார். தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் கீழடி உண்மையை ஏற்கத் திராணி இல்லை; தமிழ்நாட்டு மீனவர்களின் கைதைத் தடுக்க வக்கில்லை என சாடிய அவர், இந்த இலட்சணத்தில் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் எனப் பேசக் கொஞ்சமும் வெட்கமில்லையா அமித்ஷா அவர்களே! என்று கொந்தளித்துள்ளார்.