News February 27, 2025
ஆப்கானிஸ்தான் த்ரில் வெற்றி

ICC Champions Trophy: ENG-க்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த AFG 325 ரன்கள் குவித்தது. இந்த கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ENG 49.5 ஓவரில் 317 ரன்கள் ஆல் அவுட் ஆனது. ஆப்கன் அணியில் அசத்தலாக பேட்டிங் செய்து இப்ராஹிம் சத்ரான் 177 ரன்கள் குவிக்க, அபாரமாக பந்து வீசிய Azmatullah Omarzai 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Similar News
News February 27, 2025
மகா கும்பமேளா: மம்தா பானர்ஜி சந்தேகம்

144 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இவ்வாண்டு மகா கும்பமேளா கொண்டாடப்படுகிறதா என மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மகா கும்பமேளா 2025இல் கொண்டாடுவதன் துல்லியத் தன்மை குறித்து நிபுணர்கள் சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 2013இல் கும்பமேளா நடைபெற்ற நிலையில் தற்போது மகா கும்பமேளா நடத்தப்படுவது சரியானதா என்றும் மம்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
News February 27, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: பயனில சொல்லாமை
▶குறள் எண்: 191
▶குறள்:
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
▶பொருள்: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.
News February 27, 2025
செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து கார்த்தி கருத்து

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மீதான புகார் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இதை தான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை என்றும், கடந்து செல்லவே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 15க்கும் மேற்பட்டவர்கள் செல்வப்பெருந்தகை மீது பிரியங்கா காந்தியிடம் புகார் கூறியிருந்தனர்.