News October 29, 2025
இந்தியாவின் கைப்பாவையாக ஆப்கன் உள்ளது: பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் , இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கிறது. இதனிடையே ஆப்கானிஸ்தான், இந்தியாவின் கைப்பாவையாக செயல்படுவதாக பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் துண்டுதலின் பேரில், ஆப்கானிஸ்தான் செயல்படுவதாகவும், பாகிஸ்தானின் பதில் தாக்குதலை ஆப்கானால் தாங்க முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 29, 2025
பெண்களே இந்த நேரத்துல காஃபி குடிக்காதீங்க!

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். *கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது. *தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் *மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் *ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது.
News October 29, 2025
₹888 கோடி லஞ்சம்… கனவுகளை தகர்த்த அரசு: அண்ணாமலை

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ₹888 கோடி லஞ்சம் பெற்று, 2,538 பணியிடங்களுக்கு நியமனங்கள் நடைபெற்றிருப்பதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதனால் விடாமுயற்சியுடன் தயாராக இருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளை அரசு தகர்த்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். முறைகேடாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு, CM ஸ்டாலின் தான் ஆணைகளை வழங்கியுள்ளதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
News October 29, 2025
BREAKING: IND Vs AUS ஆட்டம் மழையால் ரத்து

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. கான்பெர்ராவில் நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 5 ஓவர்களில் 43 ரன்கள் எடுத்த போது மழை பெய்தது. போட்டி 18 ஓவர்களாக குறைக்கப்பட, இந்தியா 9.4 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்திருந்தது. மீண்டும் மழை பெய்திட, வானிலையும் சாதகமாக இல்லாததால் போட்டியை தொடர முடியாது என நடுவர்கள் அறிவித்தனர்.


