News December 21, 2024

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆப்கான்

image

3வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே, 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான், 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.

Similar News

News July 5, 2025

வெந்நீரில் குளித்தால் ஆண்மை குறைபாடு ஏற்படுமா?

image

ஆண்கள் வெந்நீரில் அதிக நேரம் குளிப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் குறைய வாய்ப்புள்ளதாக California University ஆய்வு கூறுகிறது. ஷவரில் குளிப்பதை விட, குளியல் தொட்டிகளில் குளிப்பதால் பாதிப்பு அதிகமாம். அதேநேரம், வெந்நீரில் குளிப்பதை நிறுத்திய சில மாதங்களில், பாதிப்பு சரியாகி விடுமாம். ஆகவே, சாதாரண தண்ணீரில் குளிப்பது நல்லது, உடல் அசதியாக இருக்கையில் வெந்நீர் குளியல் போடலாமாம்.

News July 5, 2025

இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் டார்கெட்

image

2-வது டெஸ்டில் 427 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர் செய்துள்ளது. 2-வது இன்னிங்சில் ராகுல்(55), ரிஷப் பண்ட்(65), ஜடேஜா(69) அரைசதம் அடித்தனர். கேப்டன் கில்(161) சதம் அடித்து அணிக்கு தூணாக நின்றார். இதனால் இங்கிலாந்துக்கு இமாலய இலக்கை இந்திய அணியால் நிர்ணயிக்க முடிந்தது. இந்திய அணியின் பந்து வீச்சும் பேட்டிங்கை போல் அதிரடியாக இருந்தால் வெற்றி நமதே.

News July 5, 2025

PM KISAN: வங்கி கணக்கில் ₹2000 எப்போது?

image

நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பு PM KISAN திட்ட தவணைத் தொகை எப்போது கிடைக்கும் என்பதுதான். ஜூனில் பணம் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியான நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், ஜூலை 18 அன்று பிஹாரின் மோட்டிஹரி பகுதியில் PM மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியில், பண வரவு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!