News June 27, 2024
ஆஃப்கன் பேட்டிங் தேர்வு

டி20 உலகக்கோப்பையின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று காலை 6 மணிக்கு தொடங்குகிறது. அரையிறுதிக்கு முதல்முறையாக நுழைந்துள்ள ஆஃப்கன் அணி, தென்னாப்பிரிக்காவுடன் மோதுகிறது. இந்நிலையில் டாஸ் வென்ற AFG முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. போட்டியின் போது மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட முடியாத சூழல் நிலவினால் இன்னொரு நாள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
அஜித் குமார் மரணம்.. திடுக்கிடும் புதிய தகவல்

அஜித் குமார் கொலை வழக்கில், நிகிதா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். அஜித் குமாரிடம் போலீஸ் விசாரித்தது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். நகை காணாமல் போனதாக புகாரளித்த பிறகு, மடப்புரத்தில் இருந்து தான் கிளம்பிவிட்டதாக கூறிய நிகிதா, தனது புகாரில் உண்மை இல்லை என CBI கூறவில்லை; ஆதாரம் இல்லை என்றுதான் தெரிவித்துள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.
News March 5, 2026
EPS இதனால்தான் பதற்றத்தில் இருக்கிறார்: மாணிக்கம் தாகூர்

நிதிஷ்குமார் நிலைமை மூலம் NDA-ல் உள்ள கூட்டணிகளுக்கும் ஒரு செய்தி தெளிவாக சென்றிருக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளார். பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியது பற்றி குறிப்பிட்ட அவர், பாஜக கூட்டணிகளில், கூட்டாளிகள் உண்மையான கூட்டாளிகள் அல்ல, அவர்கள் வெறும் பயணிகள் மட்டுமே என தெரிவித்துள்ளார். அதனால்தான், EPS போன்ற தலைவர்கள் சிறிது பதற்றமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
News March 5, 2026
போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டது: ராகுல்

இந்திய பெருங்கடலில் ஈரானிய கப்பல் வீழ்த்தப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். போர் இந்தியாவின் வாசலுக்கே வந்துவிட்டதாக கூறிய அவர், PM மோடி இதைபற்றி வாய் திறக்காமல் மௌனம் காக்கிறார் என விமர்சித்துள்ளார். மேலும், இதுபோன்ற ஒரு தருணத்தில் இந்தியாவுக்கு ஒரு நிலையான பிரதமர் தேவை எனவும், ஆனால் USA-விடம் நாட்டையே விட்டுக்கொடுத்த ஒரு பிரதமரை இந்தியா தற்போது கொண்டுள்ளதாகவும் சாடியுள்ளார்.


