News June 18, 2024
சயனக் கோலத்தில் அருளும் ஈசன்

தமிழ்நாட்டிலேயே சயனக் கோலத்தில் ஈசன் காட்சி தரும் திருத்தலம் சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயிலில் மட்டுமே உள்ளது. ஆலகால விஷத்தை அருந்திய மயக்கத்தில் பார்வதி மடியில் ஈசன் தலைசாய்த்து, தேவர்களுக்கு அருள்பாலித்த இத்தலத்திற்கு, 14 பிரதோஷங்களுக்கு விரதமிருந்து சென்று, வில்வ மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, சிவப்பரிசி புட்டு படைத்து வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
Similar News
News March 18, 2026
எந்த வயதில் தத்தெடுத்தாலும் மகப்பேறு விடுப்பு உண்டு : SC

3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தையை தத்தெடுத்தால் மட்டுமே 12 வார கால மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று கூறும் சட்டப்பிரிவு 60(4)-ஐ SC ரத்து செய்துள்ளது. ஒரு குழந்தை எந்த வயதில் தத்தெடுக்கப்பட்டாலும், அந்தப் புதிய சூழலுடனும் தாயுடனும் ஒன்றிணைவதற்கு கால அவகாசம் தேவை எனவும், தத்தெடுக்கும் குழந்தையின் வயது எவ்வளவாக இருந்தாலும், தாய்க்கு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு என்றும் தீர்ப்பளித்துள்ளது.
News March 18, 2026
கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.
News March 18, 2026
BREAKING: அதிமுகவுடன் சேர்ந்தார்

OPS திமுகவில் இணைந்ததால், அதிருப்தியடைந்த அவரின் தீவிர ஆதரவாளர்கள் பலர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்து வருகின்றனர். அந்த வகையில், OPS அணியை சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் பலர் EPS முன்னிலையில் மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும், OPS உடன் பயணித்த இன்னும் சில தலைவர்கள் அதிமுகவுக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


