News September 15, 2024
நடிகைகளை அமைதி காக்க அறிவுறுத்தல்?

பாலியல் புகார் தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்று நடிகைகளை நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடிகைகளை போனில் தொடர்பு கொண்டு சிலர் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல், பாதிக்கப்பட்ட நடிகைகளை சமாதானம் செய்யவே நட்சத்திர கலைவிழா நடத்த தீர்மானிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகைகள் அமைதி காப்பார்களா? கமெண்ட் பண்ணுங்க
Similar News
News December 6, 2025
புதிய பாபர் மசூதியின் தற்போதைய நிலை என்ன?

1992, இதே நாளில் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 2019-ல் SC அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியிலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள தன்னிபூர் கிராமத்தில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இதற்கான வரைபடத்தை இறுதி செய்யும்பணி முடியும் நிலையில் உள்ளதாக இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. இத்திட்டத்திற்கான காலக்கெடு 2026, ஏப்ரலில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளது.
News December 6, 2025
Free Course-ம் கொடுத்து, வேலையும் தரும் அரசு திட்டம்!

ஆன்லைனில் Free-ஆக Finance, Marketing, Coding, AI Course-களை படிக்க மத்திய அரசு தொடங்கிய திட்டம்தான் Skill India Digital. இதில் நீங்கள் Course-ஐ முடிக்கும்பட்சத்தில் சான்றிதழ் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட துறையில் வேலையும் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற <
News December 6, 2025
விஜய்யை சந்தித்தது தெரியாது: செல்வப்பெருந்தகை

காங்., நிர்வாகி <<18476742>>பிரவீன் சக்கரவர்த்தி<<>> விஜய்யை சந்தித்தது பேசுபொருளானது. இந்நிலையில், இந்த சந்திப்பு பற்றி தனக்கு தெரியாது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பின் பேட்டியளித்த அவர், பிரவீன் சக்கரவர்த்தி பற்றி மேலிடத்தில் பேச உள்ளதாகவும் குறிப்பிட்டார். இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளதாக கூறிய அவர், திமுகவோடு மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.


