News September 2, 2024
நெல்லையில் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை

திருநெல்வேலி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடைபெற்றது. உடன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Similar News
News September 9, 2025
நெல்லைக்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு

ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஏறி இறங்குவதற்கு வசதியாக நெல்லை அரசு போக்குவரத்துக் கழக கோட்டத்திற்கு 25 தாழ்தள அரசு பஸ்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் முதற்கட்டமாக 4 பஸ்கள் நெல்லை அரசு போக்குவரத்து கழகத்திற்கு வந்துள்ளன. இவற்றை விரைவில் முக்கிய வழித்தடங்களில் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
News September 9, 2025
நெல்லை: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் – அரசு பணி!

நெல்லை மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News September 9, 2025
நெல்லை: போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்!

பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டராக மகேஷ் குமார் என்ற அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே பாளையில் பணிபுரிந்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் டவுனுக்கும், டவுனில் பணிபுரிந்த இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தச்சநல்லூர் காவல் நிலையத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காசி பாண்டியன் கவின் கொலை வழக்கில் கொலையாளிக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.