News November 29, 2024
பொதுமக்களுக்கு… EB கொடுத்த அட்வைஸ்

*மின்கம்பத்தின் மீது கொடி கயிறு கட்டி துணி காய வைக்கும் செயலை தவிர்க்க வேண்டும். குளியலறை, கழிப்பறை ஆகிய ஈரமான இடங்களில் சுவிட்சுகளை பொருத்த வேண்டாம். * மின் கம்பத்திலோ, அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். * மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்தக் கூடாது. * மின்மாற்றிகள், மின்கம்பிகள், மின்பகிர்வுப் பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
Similar News
News April 27, 2025
நிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் இனி எங்கு செல்லும்?

பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் பாக். உடனே பாதிக்கப்படாது. காரணம், பாக்.ல் இருக்கும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் பாக்லிஹார், கிஷங்கங்கா அணைகள் என சிறிய உள்கட்டமைப்புகளை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இது குறைந்த அளவே நீரைத் தேக்கும். ஆனால், இந்தியா அணைகளை கட்டி நீரை முழுவதுமாக நிறுத்தினால் பாக்.-க்கு நீண்டகால பிரச்னையாக மாறும்.
News April 27, 2025
கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது!

கம்பீருக்கு<<16198203>> ‘I kill you’<<>> என மெயில் அனுப்பிய வழக்கில், குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் (21) என்ற இன்ஜினியரிங் மாணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கம்பீருக்கு இந்த மெயில் வந்திருந்தது. ஏற்கனவே, கம்பீருக்கு 2022-ல் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மெயில் வந்திருந்தது.
News April 27, 2025
நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

காவல் படத்தை இயக்கியவர் நாகேந்திரன். இதேபோல், மேலும் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று அவர் திடீரென மரணம் அடைந்தார். நாகேந்திரனின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதில் அவர் மரணமடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாகேந்திரன் மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.