News March 23, 2025

பிரச்னைகளை திசை திருப்பவே விளம்பர அரசியல்: ஜி.கே.வாசன்

image

சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை திசைதிருப்பவே, அண்டை மாநில முதல்வர்களுடன் CM ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதாக ஜி.கே.வாசன் விமர்சித்துள்ளார். தொகுதி மறுவரையரை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத போது, தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என எப்படி திமுக அரசுக்கு தெரியும் எனவும், அறிவிக்கப்படாததை ஒன்றை வைத்து திமுக விளம்பர அரசியல் செய்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

Similar News

News March 24, 2025

டெல்லியில் ஹைடெக் பாலியல் தொழில்.. சிக்கிய பலே கும்பல்!

image

டெல்லியில், உணவு டெலிவரி செய்வதைப் போல் ஹோட்டல்களில் பெண்களை டெலிவரி செய்து பாலியல் தொழில் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஹைடெக் பாணியில் நடந்த இந்த தொழில் சிக்கிய 3 சிறுமிகள் உட்பட 23 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதில், 10 பேர் நேபாளிகள் என்பது தெரியவந்துள்ளது. 7 பேர் கொண்ட அந்த கும்பல் 5 நிமிடங்களுக்கு ₹700 – ₹10,000 வரை வசூலித்த அவலம் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News March 24, 2025

புற்றுநோய் ஆபத்தை ஏற்படுத்தும் உணவுகள்!

image

புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தும் உணவுகளை தெரிஞ்சிக்கோங்க.*உப்பிட்டு தயாரிக்கப்படும் கருவாட்டில் உள்ள நைட்ரோசாமைகளால் மூக்கில் புற்றுநோய் ஏற்படும். *சிவப்பு இறைச்சி அதிகம் உட்கொள்வதால் குடல் புற்றுநோய் உருவாகும். *கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானங்களில் உள்ள சர்க்கரையால் கணைய புற்றுநோய் வரும். *மைக்ரோவேவ் செய்யப்பட்ட பாப்கார்னில் உள்ள Perfluorooctanoic acid அமிலத்தால் புற்றுநோய் வரும். உஷார்..

News March 24, 2025

கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு நெஞ்சு வலி

image

பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் நெஞ்சு வலி காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்காவில் கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தபோது நெஞ்சு வலி காரணமாகச் சுருண்டு விழுந்த அவரை அழைத்துச் செல்ல ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வலி அதிகமானதால் அருகில் உள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!