News August 28, 2025
₹10,000 கோடியை இழக்கும் விளம்பரத் துறை

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவால் முக்கிய ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்கள் உடனான ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து ரத்தாகி வருகின்றன. அத்துடன், இதுபோன்ற கேமிங் நிறுவன விளம்பரங்களில் நடித்துவந்த கங்குலி, தோனி, கில் உள்ளிட்டோரும், கோடிக்கணக்கில் தங்களது வருமானத்தை இழந்துள்ளனர். இந்நிலையில், கேமிங் தொடர்பான விளம்பரத் துறை ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ₹8,000 – ₹10,000 கோடியை இழக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News August 28, 2025
Uncle என விஜய் அழைத்தது சரிதான்.. K.S.ரவிக்குமார்

தவெக மாநாட்டில் முதல்வரை ‘ஸ்டாலின் Uncle’ என விஜய் கூறியதற்கு தொடர்ந்து கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்நிலையில், Uncle என விஜய் அழைத்ததில் தவறில்லை என இயக்குநர் K.S.ரவிக்குமார் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் கூட அவரை பார்க்கும்போது ‘வணக்கம் Uncle’ என்றே பேசுவதாக குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது அரசியல் நாகரிகமற்றது என பல்வேறு கட்சியினரும் கூறி வருகின்றனர்.
News August 28, 2025
பலத்த காற்றுடன் கனமழை வெளுக்கும்

நீலகிரி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட், கோவை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட்டை IMD விடுத்துள்ளது. மேலும், மதுரை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பூர், விருதுநகர், பெரம்பலூர், தஞ்சை, திருவள்ளூர், வேலூர், திருப்பூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், மழையின்போது பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
News August 28, 2025
மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.