News February 18, 2025

கும்பமேளாவுக்காக சாகசம்: 1,400 கி.மீ BIKE RIDE

image

கும்பமேளாவுக்கு செல்வது அவ்வளவு ஈஸி இல்லை. ரயில்களில் டிக்கெட் கிடைக்காது, ஹைவேக்களில் டிராஃபிக், விமானப் பயணம் காஸ்ட்லி. சோ, மாற்றி யோசித்த மும்பை தம்பதி அர்பித் – ஷிவானி பைக்கிலேயே புறப்பட்டனர். மொத்தம் 1,400 கிமீ தூரத்தை பைக்கிலேயே கடந்துள்ளனர். களைப்பு, தூக்கம் என இடர்கள் இருந்தாலும் கும்பமேளாவுக்காக ரிஸ்க் எடுக்கலாம் என்கிறார் ஷிவானி. உங்கள் கருத்து என்ன கமெண்ட் செய்யுங்கள்.

Similar News

News January 26, 2026

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 592 ▶குறள்: உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். ▶பொருள்: ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது.

News January 26, 2026

2026, 2031-ல் திமுக ஆட்சி தான்: ராஜ கண்ணப்பன்

image

பார்லிமெண்ட் தேர்தலில் PM மோடி 8 முறை தமிழகத்திற்கு வந்தார். அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என அமைச்சர் ராஜகண்ணப்பன் விமர்சித்துள்ளார். மேலும், 2026, 2031-ல் திமுக தான் மீண்டும் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றவர், சுதந்திரம் அடைந்து மக்களுக்கு தேவையான குடிநீர், பாசனம், போக்குவரத்து, உணவு, கல்வி என அனைத்தும் திமுக ஆட்சியில் தான் சீர் செய்யப்பட்டுள்ளது எனவும் பேசியுள்ளார்.

News January 26, 2026

சிஷ்யனை கிண்டலடித்த யுவராஜ் சிங்

image

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20-யில் அபிஷேக் சர்மா வெறும் 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். 2007-ல் இங்கி., அணிக்கு எதிராக இந்திய Ex வீரர் யுவராஜ் சிங் 12 பந்தில் அதிவேக அரைசதம் கண்டதே இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. இந்நிலையில் யுவராஜ், இன்னும் உங்களால் 12 பந்துகளில் 50 ரன்கள் அடிக்க முடியவில்லையே என ஜாலியாக சீண்டியதுடன், தொடர்ந்து இதுபோல் சிறப்பாக ஆடுங்கள் எனவும் பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!