News March 30, 2024
பாரத ரத்னா விருது வாங்க வராத அத்வானி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, பாரத ரத்னா விருதை வாங்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வரவில்லை. அவருடன் சேர்த்து, 5 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் 4 பேர் சார்பில் அவர்களின் வாரிசுகள் நேரில் விருதை பெற்றுக் கொண்டனர். ஆனால், அத்வானியோ, அவரது குடும்பத்தினரோ வரவில்லை. உடல்நிலை காரணமாக அத்வானியின் வீட்டுக்கு சென்று விருது அளிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 19, 2025
மயில்சாமி அண்ணாதுரையை வைத்து தேர்தல் கணக்கு?

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.
News August 19, 2025
சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.
News August 19, 2025
அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.