News February 1, 2025
DMK கொடியை கட்டிக்கொண்டு ADMKவினர் அட்டூழியம்

திட்டமிட்டு திமுக கொடியை பயன்படுத்தி அதிமுகவினர் தீய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்று ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார். ஈசிஆரில் பெண்களை துரத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட மகிந்தரா தார் வாகனம் நீலகிரி அதிமுக செயலாளரின் சகோதரி மகனுடையது. இவ்வழக்கில் கைதான சந்தூரு அதிமுகவை சேர்ந்தவர். அதிமுகவினர் செய்யும் தவறுக்கு திமுகவினர் மீது இபிஎஸ் பழி சுமத்துகிறார் என்று சாடியுள்ளார்.
Similar News
News March 5, 2026
மார்ச் 5: வரலாற்றில் இன்று

*1953 – சோவியத் யூனியனின் சர்வாதிகாரி ஸ்டாலின் நினைவு நாள் *1956 – நடிகை ஸ்ரீபிரியா பிறந்தநாள் *1958 – நடிகர் நாசர் பிறந்தநாள் *1959 – அரசியல்வாதி சிவ்ராஜ் சிங் சௌஹான் பிறந்தநாள் *1976 – இயக்குநர் செல்வராகவன் பிறந்தநாள் *2008 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கி. சிவநேசன் படுகொலை *2013 – நடிகை ராஜசுலோசனா நினைவு நாள்
News March 5, 2026
‘B-2 Bomber’ பின்னணியில் இந்திய வம்சாவளி

உலகிலேயே பயங்கர போர் விமானமான B-2 Bomber-ஐ ஈரான் மீது USA பயன்படுத்துகிறது. இதன் உருவாக்கத்தில் நோஷிர் கோவாடியா என்ற இந்திய வம்சாவளியின் பங்கும் உண்டு. 1944 மும்பையில் பிறந்த இவர், USA-ல் Aeronautical Eng படித்தார். பிறகு Northrop Grumman என்கிற போர் விமானங்களை உருவாக்கும் கம்பெனியில் பணியாற்றினார். ஆனால், இதுபற்றி சீனாவிற்கு தகவல் தந்ததாக USA கோர்ட் அவருக்கு 32 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
News March 5, 2026
எங்குமே ஹிந்தியை திணிக்கவில்லை: எல்.முருகன்

தமிழ் மொழியை மட்டுமே TN-ல் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்தி வருவதாக எல்.முருகன் தெரிவித்துள்ளார். <<19294297>>திருச்சி ரயில்வே அலுவலக சர்ச்சை<<>> குறித்த கேள்விக்கு, மத்திய அரசு எங்குமே ஹிந்தியை திணிப்பதில்லை எனக் கூறினார். தமிழ் தான் தொன்மையான மொழி என உலகம் முழுக்க PM மோடி பேசுவதாக குறிப்பிட்ட அவர், திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எதுவுமே செய்யவில்லை என குற்றஞ்சாட்டினார்.


