News April 25, 2025

இன்று ADMK மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

image

ADMK பொதுச் செயலாளர் இபிஎஸ் தலைமையில் இன்று மாலை 04:30 மணிக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்த பிறகு கட்சியினுள் அதிருப்தி ஏற்பட்டதாலேயே இபிஎஸ் விருந்து வைத்ததாக தகவல் வெளியானது. மேலும், இந்த விருந்தில் செங்கோட்டையன் ஆப்சென்ட் ஆன நிலையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் அரசியல் கவனம் பெற்றுள்ளது.

Similar News

News November 1, 2025

ஏன் அர்ஷ்தீப் சிங் இல்லை.. விளாசிய அஸ்வின்

image

Experiment செய்ய வேண்டும் என்றால், பும்ராவை நீக்கிவிட்டு அணியில் அர்ஷ்தீப் சிங்கை சேர்க்கலாமே என அஸ்வின் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பும்ரா விளையாடினாலும், பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் இருக்க வேண்டும் என தெரிவித்த அஸ்வின், T20-யில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்காமல் போகிறது என்பது புரியவில்லை எனவும் கூறினார். அர்ஷ்தீப் சிங் அடுத்த மேட்ச்சில் விளையாடணுமா?

News November 1, 2025

3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

image

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

News November 1, 2025

தங்கம் விலையில் அக்டோபரில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்

image

கடந்த மாதம் 1-ம் தேதி சவரனுக்கு ₹240 விலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை மளமளவென உயர்ந்து கடைசி நாளான நேற்று சவரன் ₹90,400 என்ற நிலையில் முடிந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 7 நாள்களாக உயர்வு, சரிவு என மாற்றங்கள் இருந்ததால் நம்மூர் சந்தையிலும் சவரன் ₹97,600-ல் இருந்து ₹7,200 குறைந்தது. உலக சந்தையில் தற்போது விலை நிலையாக இருப்பதால் இன்று(நவ.1) பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!