News November 10, 2024
ADMK – BJP கூட்டணி: ஷாக் கொடுத்த இபிஎஸ்

பாஜகவுடன் கூட்டணி அமைப்பீர்களா என்ற கேள்விக்கு, தேர்தல் நெருங்கும்போது அரசியல் சூழலை பொறுத்து கூட்டணி அமைக்கப்படும் என்று இன்று பதிலளித்தார் இபிஎஸ். இது பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது என்பதை மறைமுகமாக சொல்வதாக உள்ளது. விஜய்யால் அரசியல் களம் மாறியுள்ள நிலையில், திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைப்பேன் என்பதையே இபிஎஸ் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அடித்து ஆடத் தொடங்கிவிட்டாரா இபிஎஸ்?
Similar News
News August 4, 2025
மிரட்டலுக்கு அஞ்சோம்… ரஷ்ய ஆயில் வாங்கும் இந்தியா

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும்; இல்லையெனில் வரிவிதிப்பு மற்றும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்தது. ஆனால், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தும் எண்ணம் இல்லை என்று இந்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. வார இறுதியில் கூட ரஷ்யாவிலிருந்து மில்லியன் கணக்கான பேரல்கள் எண்ணெய், இந்திய துறைமுகங்களை அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
News August 4, 2025
₹105 கோடியை வசூலித்தது ‘மகாவதாரம் நரசிம்மா’

‘மகாவதாரம் நரசிம்மா’ படத்தின் வசூல் ₹105 கோடியை தாண்டிவிட்டதாக ஹோம்பலே பிலிம்ஸ் அறிவித்துள்ளது. இரணியகசிபு, அவரது மகன் பிரகலாதன், மகா விஷ்ணுவை மையமாக வைத்து புராண அனிமேஷன் படமாக தயாரித்து தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ‘மகாவதார் சினிமாட்டிக் யுனிவர்ஸ்’-ன் கீழ் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விவரிக்கும் வகையில் படங்களை தயாரித்து அடுத்தடுத்து வெளியிடவுள்ளது. நீங்க படம் பார்த்துட்டீங்களா?
News August 4, 2025
திமுகவுக்கு கூட்டணி, அதிமுகவுக்கு மக்கள்: EPS

விவசாயிகள், ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், போராட்டம் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவுக்கு போராட்டக்களமாக தமிழ்நாடு மாறிவிட்டதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார். பொய் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சியை பிடித்ததாகவும், திமுகவின் தேர்தல் அறிக்கை பொய் அறிக்கை என்றும் கூறினார். கூட்டணியை நம்பியுள்ள கட்சி திமுக என்றும், ஆனால் மக்களை நம்பி அதிமுக உள்ளதாகவும் தெரிவித்தார்.