News January 22, 2026
ADMK போல இரவோடு இரவாக கைது செய்யவில்லை: CM

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுடன் TN அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சி போல அரசு ஊழியர்களை இரவோடு இரவாக கைது செய்து சிறையில் அடைக்கவில்லை எனவும் பதிலளித்துள்ளார். ஊழியர்களின் போராட்டத்தை வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும் அரசு ஊழியர்களின் ஊதியம் குறித்து கொச்சைப்படுத்தும் அளவுக்கு EPS பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Similar News
News February 19, 2026
பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு வரும் 21-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள், மாநில அரசு அலுவலகங்கள் இயங்காது என கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அதேபோல், பொன் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு வட்டத்திற்கு பிப்.25 அன்று உள்ளூர் விடுமுறையாகும்.
News February 19, 2026
மனைவியை அடிக்கலாம்… தாலிபனின் புதிய சட்டம்

உலகம் முழுவதும் ஆதிக்கத்துக்கு முதலில் பலியாவது பெண்களும் குழந்தைகளும் தான். ஆப்கனை ஆளும் தாலிபன் ஆட்சியில் வந்துள்ள புதிய விதிகளின் படி கணவன்கள் தங்கள் மனைவிகளையும் குழந்தைகளையும் அடித்து உதைக்கலாமாம். ஒரே கண்டிஷன் எலும்பு முறிவு, வெளியே தெரியுமளவு பெரிய காயங்கள் ஏற்படுத்தக் கூடாதாம். அதையும் மீறினால், அந்த குற்றத்தை மனைவி கோர்ட்டில் நிரூபித்தால், அதிகபட்சம் 15 நாள் ஜெயில் தண்டனையாம்.
News February 19, 2026
பிரேமலதா போட்டியிடும் தொகுதி இதுவா?

திமுக கூட்டணியில் இணைந்திருக்கும் பிரேமலதா, தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில், இவர் விருதாச்சலம் (அ) ரிஷிவந்தியத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இந்த தொகுதிகளில் 2006, 2011-ல் வென்றார் விஜயகாந்த். எனவே இந்த செண்ட்டிமெண்ட்டை அவர் கையில் எடுக்கலாம் என்கின்றனர். விஜயபிரபாகரனும் விருதுநகரில் களமிறங்கலாம் என பேசப்படுவதால் அந்த 1 MP சீட் யாருக்கும் என கேள்வி எழுந்துள்ளது.


