News November 28, 2024
கே.பாலகிருஷ்ணன் ஹாஸ்பிடலில் அட்மிட்

உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை ராஜிவ் காந்தி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சளி மற்றும் தொண்டை வலியால் அவதியடைந்து வரும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலையை மூத்த மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது. எனினும், சிகிச்சை முறை குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News August 20, 2025
சொத்துப் பிரச்னைகளை தீர்க்கும் ஸ்ரீசுவர்ணாகர்ஷணர்

அஷ்டாஷ்டகர்களில் பொன் சொரியும் ஆதிசக்தி ஸ்ரீசுவர்ண ஆகர்ஷண பைரவ மூர்த்தி அருட்குணம் கொண்டவர் என்று மந்திரநூல்கள் போற்றுகின்றன. இத்தகு பைரவர் வீற்றிருக்கும் திருத்தலம் குடந்தை செம்பியவரம்பலில் மட்டுமே உள்ளது. ஆனி தேய்பிறை அஷ்டமி நாளில் இக்கோயிலுக்கு சென்று, செஞ்சந்தனகாப்பு செய்து, பூசணி தீபமேற்றி, மிளகு வடை படைத்து வழிபட்டால் நிலம் & சொத்து தொடர்பான பிரச்னைகள் நீங்கும் என்பது ஐதீகம்.
News August 20, 2025
அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி

அதிமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக புதிய நீதிக்கட்சி இணைந்துள்ளது. வேலூரில் பரப்புரை செய்த EPS-க்கு வெள்ளியில் வேல் ஒன்றை வழங்கி அக்கட்சியின் தலைவர் AC சண்முகம் வாழ்த்து தெரிவித்தார். வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறிப்பிட்ட வாக்கு வங்கியை கொண்டுள்ள AC சண்முகம், 2026 தேர்தலில் தீவிரமாக பரப்புரை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இது அதிமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
News August 20, 2025
தங்க நிற கவுனில் மின்னும் தமன்னா..!

அண்மையில் பிரபல ஃபேஷன் டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா நடத்திய INAYA பேஷன் நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்துக் கொண்டார். மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைத்த தங்க நிற கவுனை அணிந்துக்கொண்டு அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இந்த வைரல் புகைப்படங்களை மேலே கொடுத்துள்ளோம் Swipe செய்து பாருங்கள்.


