News October 5, 2025
ராமதாஸ் ஹாஸ்பிடலில் அனுமதி

பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பரிசோதனை மேற்கொள்ள ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் குறித்த அறிக்கையை ஹாஸ்பிடல் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாமக தொண்டர்களுக்கு மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News October 6, 2025
தேர்தல் நடைமுறையில் 17 மாற்றங்கள் அறிவிப்பு (1/2)

*பதிவு செய்து 15 நாள்களுக்குள் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். *1,500 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி என்பது 1,200-ஆக குறைப்பு. *வேட்பாளரின் புகைப்படம் கருப்பு வெள்ளைக்கு பதிலாக கலராகவும், EVM-ல் உள்ள எழுத்துக்கள் பெரிதாகவும் பொறிக்கப்படும். *பூத் ஏஜெண்டுகளுக்கு பயிற்சி. *EVM வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்தால், VVPAT ரசீதுகளும் எண்ணப்படும்.
News October 6, 2025
தேர்தல் நடைமுறையில் 17 மாற்றங்கள் அறிவிப்பு (2/2)

*பூத் அதிகாரிகளுக்கு ஐடி கார்டு. *சட்டம், ஒழுங்கை பேண காவல்துறைக்கு சிறப்பு அமர்வுகள். *போலி வாக்காளர்களை நீக்க SIR நடைமுறை. *தபால் வாக்குகளுக்கு பதிலாக, முதலில் EVM வாக்குகள் எண்ணப்படும். *தேர்தல் முடிந்ததும், எத்தனை பேர் வாக்களித்தது, அதில் ஆண்கள், பெண்கள் எத்தனை என்பது போன்ற விவரங்கள் அனைவரும் அறிந்துகொள்ளும்படி பொதுவெளியில் வைக்கப்படும்.
News October 6, 2025
ராசி பலன்கள் (06.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.