News August 20, 2025

மு.க.தமிழரசு ஹாஸ்பிடலில் அனுமதி

image

CM ஸ்டாலினின் சகோதரர் மு.க.தமிழரசு, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைச்சுற்றல், மயக்கம் காரணமாக அவர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரியிலும் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இவர் நேரடி அரசியலில் இல்லையென்றாலும், உதயநிதி, தயாநிதி மாறன் ஆகியோருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

Similar News

News January 20, 2026

பனையூரில் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

image

பரபரப்பான 2026 தேர்தல் களத்துக்கு மத்தியில், தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபடுகிறது. இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்பட பலரும் வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது. 12 பேர் கொண்ட இக்குழு பல்துறை நிபுணர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

News January 20, 2026

₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

image

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 20, 2026

மகளிர் உரிமைத் தொகை.. பேரவையில் HAPPY அறிவிப்பு

image

2021-ல் தொடங்கிய CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேரவையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!