News May 8, 2024
ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர் சேர்க்கை

நடப்பு கல்வியாண்டு முதல், வேளாண் பல்கலை., ஜெயலலிதா மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.யில் நடத்தப்படும் வேளாண் படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://tnagfi.ucanapply.com இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பொது ₹600, SC, ST ₹300 கட்டணம். விவரங்களுக்கு 94886 35077, 94864 25076, 04365 – 256430 என்ற எண்களில் அழைக்கவும்.
Similar News
News August 23, 2025
சென்னையில் மழை.. காலையிலேயே துயர மரணம்

சென்னையில் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரலட்சுமி என்ற தூய்மை பணியாளர், இன்று காலை வேலைக்கு செல்லும்போது மழை நீரில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவருக்கு 12 வயதில் பெண் குழந்தையும், 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் இவர்தான். தற்போது அம்மாவை பறிகொடுத்த 2 குழந்தைகளும் யாரும் இல்லாமல் தவிக்கின்றனர்.
News August 23, 2025
ராகுல் காந்தி நடைபயணத்தில் CM ஸ்டாலின்

பாஜக, ECI-யை வைத்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதற்கு எதிராக ராகுல் காந்தி பிஹாரில் நடைபயணத்தையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த பயணத்தில் CM ஸ்டாலின் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக.27-ல் இந்த பயணத்தில் கலந்துகொண்டுவிட்டு, அங்கிருந்தவாறே அவர் வெளிநாடு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News August 23, 2025
உங்களிடம் நகை இருந்தால்.. அமைச்சர் கொடுத்த அதிர்ச்சி

காது, கழுத்துல நகை போட்டு இருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடையாது என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியது நேற்று முதல் விவாதப்பொருளாக மாறியுள்ளது. உண்மையில் அமைச்சர் சொல்வதுபோல் அப்படி எதுவும் கிடையாது. 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் (அ) 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கும்.