News August 6, 2024
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு வழக்கை, ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிந்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு அவர் கைதான நிலையில், ED காவலிலிருந்து ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
Similar News
News January 19, 2026
நான் கேட்டேன்… EPS செஞ்சிட்டாரு: கஞ்சா கருப்பு

பெண்களுக்கு இலவச பஸ் போல, ஆண்களுக்கும் விடனும் என கேட்டிருந்தேன். அதை EPS அறிவித்துவிட்டார் என நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். வேங்கை படத்தில், மாலை 6 மணிக்கு மேல் ஆண்களுக்கு ஃப்ரீ பஸ் விடுங்க, நாங்க பாட்டுக்கு குடிச்சிபுட்டு அதில் ஏறி வீட்டுக்கு போயிடுவோம் என கூறினேன். அதை தான் EPS அறிவித்துள்ளார் என்றும், அதேபோன்று அம்மா இலவச வீடு திட்டமும் முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார்.
News January 19, 2026
இனி அமைதியை பற்றி சிந்திக்க மாட்டேன்: டிரம்ப்

நார்வே தனக்கு நோபல் பரிசை கொடுக்க மறுத்துவிட்டதால் இனி அமைதியை பற்றி சிந்திக்க வேண்டிய கடமை தனக்கு இல்லை என நார்வே PM-க்கு டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார். USA-ன் நலனுக்காக உழைப்பதிலேயே தனது கவனம் இருக்கும் என்ற அவர், கிரீன்லாந்துக்கு உரிமை கோரும் ஆவணம் டென்மார்க்கிடம் இல்லை என்றார். மேலும், கிரீன்லாந்து மீது USA-ன் முழு கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே உலகம் பாதுகாப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.
News January 19, 2026
பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சாட்ரோ என்ற பகுதியில் பதுங்கி இருந்து பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தினர் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அப்போது ஒரு ராணுவ ஹவில்தார் வீரமரணமடைந்த நிலையில் மேலும் 8 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.


