News August 20, 2024

செந்தில்பாலாஜி வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

செந்தில்பாலாஜி ஜாமின் கோரிய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில், ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருக்கும் அவருக்கு ஐகோர்ட் ஜாமின் வழங்க மறுத்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்த வழக்கில், அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் SC தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

Similar News

News March 11, 2026

நாட்டை மட்டுமில்லை.. வீட்டையும் பாத்துக்கணும்: CM

image

TN-ல் இருந்து குடிமைப் பணிகள் (UPSC) தேர்வில் வென்ற 60 பேரை ’ரியல் ஹீரோஸ்’ என CM ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதற்கான பாராட்டு விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் உள்ளவர்கள் நாட்டை மட்டுமல்ல, வீட்டையும் குடும்பத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும், UPSC பயிற்சி பெற முன்பு டெல்லி செல்லும் நிலை இருந்ததாகவும், ஆனால், ‘நான் முதல்வன்’ திட்டத்தால் அந்நிலை மாறியிருப்பதாகவும் பேசியுள்ளார்.

News March 11, 2026

திருமணத்தை மீறிய உறவு.. சிக்கிய இன்னொரு நடிகர்

image

கேரள அமைச்சரும், நடிகருமான KP கணேஷ்குமார், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக அவரின் மனைவி புகார் கூறியுள்ளார். இதுகுறித்து KP கணேஷ்குமார், தேர்​தல் நெருங்குவதால் இது​போன்ற பல விஷயங்கள் வரும்; இதற்கு முன்பும் தனது வீட்​டில் இருந்து பிரச்னை வந்​துள்​ளதாக விளக்கமளித்துள்ளார். மேலும், காதல் ஒன்​றும் குற்​றம் கிடை​யாது; தனக்கு ஒன்றல்ல, 5,000 காதல் உறவுகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

இந்த Headphone-களின் விலையை கேட்டா தலை சுத்தும்!

image

பாட்டு கேட்க ஒரு ஹெட்போன் இருந்தால் போதும் என்ற காலகட்டம் மாறி, தற்போது Fashion Statement ஆகவும், பொருளாதார அந்தஸ்தாகவும் ஆகிவிட்டது ஹெட்போன்கள். இதனாலேயே, லட்சக்கணக்கில் காசை வாரி இறைத்து ஹெட்போன் வாங்க சிலர் தயாராக இருக்கின்றனர். அப்படி உலகிலேயே மிகச் சிலர் மட்டுமே பயன்படுத்தும் டாப் 5 எக்ஸ்பென்சிவ் ஹெட்போன்களை அறிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. நீங்கள் பயன்படுத்தும் ஹெட்போனின் விலை என்ன?

error: Content is protected !!