News December 9, 2024
செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை ஜன.10க்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. விசாரணையை இழுத்தடிக்கும் வகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை 44இல் இருந்து 2000ஆக உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டி, செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என ஒய்.பாலாஜி என்பவர் வழக்குத்தொடர்ந்தார். இதற்கு செந்தில் பாலாஜி எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Similar News
News March 16, 2026
புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்யும் விஜய்

தவெக சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை, விஜய் இன்று இறுதி செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இன்று முதல் 23-ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது. அங்கு போட்டியிட ஆர்வமாக இருக்கும் வேட்பாளர்களிடம், விஜய் இன்னும் சற்றுநேரத்தில் நேர்காணல் நடத்துகிறார்.
News March 16, 2026
FLASH: வெள்ளி விலை ₹24,000 குறைந்தது

<<19395246>>தங்கத்தை <<>>தொடர்ந்து, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ₹4 குறைந்து ₹276-க்கும், கிலோ வெள்ளி ₹4,000 குறைந்து ₹2,76,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மார்ச் 11-ல் கிலோ வெள்ளி ₹3,00,000-க்கு விற்பனையான நிலையில், கடந்த 5 நாள்களில் மட்டும் மொத்தம் ₹24,000 குறைந்துள்ளது. வரும் நாள்களில் வெள்ளி விலை மேலும் குறையும் என கூறப்படுவதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 16, 2026
மீண்டும் சீண்டுகிறாரா மாணிக்கம் தாகூர்?

ஆணவ கொலைகளுக்கு எதிராக ’இவா நம்மவா’ மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆணவ கொலை போன்ற மனிதாபிமானமற்ற குற்றங்களுக்கு எதிராக இது ஒரு வலுவான பதில் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுவே உண்மையான சமூக நீதி என்றும், குறைவான பேச்சு, அதிகமான செயல் எனவும் கர்நாடக அரசை பாராட்டியுள்ளார். அதேவேளையில் TN-ல் ஆணவ கொலைகளைத் தடுக்க இப்படி ஒரு சட்டம் எப்போது வரும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


