News November 23, 2024
வொர்லி தொகுதியில் ஆதித்யா தாக்கரே முன்னிலை

மகாராஷ்டிராவின் வொர்லி (Worli) தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே முன்னிலை வகிக்கிறார். இந்தத் தொகுதியில் அவரை எதிர்த்து களம் கண்ட சிவசேனா (ஷிண்டே) வேட்பாளர் மிலிண்ட் முரளி தியோரா பின்தங்கியுள்ளார். இவர் அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி சிவசேனாவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்கள்.
Similar News
News December 13, 2025
EPSTEIN FILES: டிரம்ப், பில்கேட்ஸ் புகைப்படங்கள் வெளியீடு

பாலியல் குற்றவாளி <<12420595>>ஜெஃப்ரி எப்ஸ்டீனின்<<>> எஸ்டேட்டில் இருந்து பெறப்பட்ட புகைப்படங்களை அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ளது. அதில் டிரம்ப், முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பில் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும், இந்த போட்டோக்கள் எந்தவித சட்ட விரோத செயல்பாடுகளையும் குறிக்கவில்லை எனவும் ஜனநாயக கட்சி விளக்கம் அளித்துள்ளது.
News December 13, 2025
டி20 -ல் சாதனை.. ஒரே போட்டியில் 7 விக்கெட்கள்

பஹ்ரைன் வேகப்பந்து வீச்சாளர் அலி தாவூத், டி20-ல் வரலாற்று சாதனை படைத்துள்ளார். பூடானுக்கு எதிரான போட்டியில், 19 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். இதன்மூலம், டி20-ல் அதிக விக்கெட்கள் வீழ்த்திய 2-வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த பட்டியலில், மலேசிய வீரர் ஷியஸ்ருல் இத்ருஸ் (7/8) முதலிடத்திலும், சிங்கப்பூர் வீரர் ஹர்ஷா பரத்வாஜ் (6/3) 3-ம் இடத்திலும் உள்ளனர்.
News December 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 548 ▶குறள்: எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
▶பொருள்: ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.


