News May 2, 2024
குலதெய்வ கோயிலில் அதிதி-சித்தார்த் நிச்சயதார்த்தம்

நடிகர் சித்தார்த் உடனான நிச்சயதார்த்தம், 400 ஆண்டுகள் பழமையான குலதெய்வ கோவிலில் நடந்ததாக நடிகை அதிதி ராவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம் என்றும், தங்கள் திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருந்ததால், இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதை அறிவித்தோம் என்றும் அவர் கூறினார்.
Similar News
News September 21, 2025
காலை தவிர்க்க வேண்டிய உணவுகள்

உங்கள் நாளை சரியான உணவுடன் தொடங்குவது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. வெறும் வயிற்றில் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது. அவை அசௌகரியத்தை ஏற்படுத்தி செரிமான பிரச்னைக்கு வழிவகுக்கலாம். மேலே, சில உணவுகள் போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த தவிர்க்க வேண்டிய உணவு ஏதேனும் இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க.
News September 21, 2025
H-1B விசா கட்டண உயர்வு: USA வர்த்தக சபை ஆலோசனை

USA-வின் H-1B விசா பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டது இந்தியா உள்பட வெளிநாட்டினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில், இதன் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், நிறுவனங்கள் பற்றி USA வர்த்தக சபை கவலை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து நிர்வாகம் மற்றும் குழு உறுப்பினர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறியுள்ளது.
News September 21, 2025
தமிழ் படங்களுக்கு ஆஸ்கர் தகுதி இல்லையா?

சினிமாவில் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர். இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் ஆஸ்கர் பரிந்துரை பட்டியல் வெளியாகியுள்ளது. தனுஷின் நேரடி தெலுங்கு படமான ‘குபேரா’ லிஸ்ட்டில் உள்ளது. மேலும், புஷ்பா 2, கண்ணப்பா படங்களும் உள்ளன. ஆனால், ஒரு தமிழ் படம் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தமான ஒன்றாக அமைந்துவிட்டது. 2025 ஆஸ்கருக்கு தகுதியான தமிழ் படங்கள் என்று நீங்கள் கருதுவது எது?