News March 17, 2024
சித்தார்த்துடன் பார்ட்டிக்கு சென்ற அதிதி ராவ்

நடிகை அதிதி ராவும், நடிகர் சித்தார்த்தும் காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், இருவரும் இதற்கு பதில் கூறாமல் இருந்து வருகின்றனர். ஆனால், சமூக வலைத்தளத்தில் மாறி மாறி அன்பை பொழிவதும், பொது இடங்களுக்கு ஒன்றாக செல்வதுமாக உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றிற்கு இருவரும் ஒன்றாக சென்ற போட்டோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Similar News
News February 16, 2026
BREAKING: 10, +2 பொதுத்தேர்வு தேதி மாற்றமா.. அரசு அப்டேட்

TN சட்டப்பேரவை தேர்தல் காரணமாக 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் மாற்றப்படலாம் என பேசப்பட்டது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் பேசிவிட்டுதான் தேர்வு தேதியை அறிவித்ததாக கூறினார். மேலும், ஏப்.6 வரை பள்ளிகள் தங்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றார். எனவே, தேர்வு தேதிகள் மாற்றப்பட வாய்ப்பில்லை என்பதால் டென்ஷன் இன்றி மாணவர்கள் படிக்கவும்.
News February 16, 2026
ரஷ்மிகாவின் திருமண Invitation!

ரஷ்மிகா, விஜய் தேவரகொண்டாவின் திருமண அழைப்பிதழ் என்ற பெயரில் Invitation ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தங்களுக்கு 26-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக, Reception மார்ச் 4-ம் தேதி நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை. Invitation-ஐ பார்க்க இடது பக்கமாக Swipe செய்யவும்.
News February 16, 2026
மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? செல்வப்பெருந்தகை

ராகுல், கார்கேவை விட மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி பெரிய ஆட்களா என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என <<19148271>>தீர்மானம்<<>> நிறைவேற்றியது தனக்கு தெரியாது என கூறிய அவர், கூட்டணி பற்றி அறைக்குள் வைத்து பேசவேண்டியவற்றை பொதுவெளியில் பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். மேலும், இவ்வளவு நாள் விட்டுவிட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் இப்படி பேசுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.


