News July 28, 2024
நானி படத்தில் அதிதி பாலன்

நானி, எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ படத்தில் ‘அருவி’ பட நடிகை அதிதி பாலன் கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அப்படக்குழு வெளியிட்டுள்ளது. ‘அடடே சுந்தரா’ பட இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ள கேங்ஸ்டர் கதைக்களத்திலான இப்படத்தில் ‘பத்ரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
Similar News
News March 6, 2026
மாணவர்களை தவிக்க விட்ட திமுக அரசு: அன்புமணி

வருவாய்த்துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தால் சாதி & வருவாய்ச் சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். அதுபோல, கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பதற்கான அடங்கல் ஆவணமும் உழவர்களுக்கு கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார். எனவே, வருவாய்த் துறையினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி, போராட்டத்தை திமுக அரசு முடிவுக்கு கொண்டு வருமாறு அவர் X பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
News March 6, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடுக்கணழியாமை ▶குறள் எண்: 629 ▶குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
▶பொருள்: இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு.
News March 6, 2026
CINEMA 360°: பிரதீப்பின் சம்பளம் ₹50 கோடி

*ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் ‘Ordinary Man’ படத்தின் ஷூட்டிங் தொடங்கியது *சமுத்திரக்கனியின் ‘கார்மேனி செல்வம்’ ஏப்.3-ல் ரிலீசாகும் என அறிவிப்பு *செல்வராகவனின் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் டீசர் வெளியானது *தனது அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதன் ₹50 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் *மலையாள இயக்குநர் தின்ஜித்திடம்(EKO) தனுஷ் கதை கேட்டுள்ளாராம் *ஜீவாவின் ‘TTT’ 50 நாள்களை கடந்தது


