News March 24, 2024
நாடு முழுவதும் புவி நேரம் கடைபிடிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்றிரவு 1 மணி நேரம் புவி நேரம் கடைபிடிக்கப்பட்டது. இரவு 8.30 முதல் 9.30 மணி வரை அவசியமின்றி எரியும் விளக்குகளை அணைத்து வைக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது. அதன்படி, கொல்கத்தா, மும்பை, டெல்லி, சென்னை உள்பட நாட்டின் பல பகுதிகளில் ஒரு மணி நேரம் மின் விளக்குகள் அணைத்து வைக்கப்பட்டது.
Similar News
News January 23, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.
News January 23, 2026
திமுகவுக்கு எதிராக காங்கிரஸ் ரகசிய ரூல்ஸ் போட்டதா?

காங்கிரஸில் புதிதாக தேர்வாகியுள்ள மாவட்ட தலைவர்கள் திமுகவினரோடு பேசக்கூடாது என தலைமை உத்தரவிட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. பிப்.14-ல் ராகுல் தமிழகம் வரும்போதுதான் கூட்டணி இறுதியாகும். அதற்குள் திமுகவோடு இணக்கம் காட்டவேண்டாம் என்பதற்காகவே இப்படியொரு ரகசிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இருகட்சிகளுக்கு இடையே இருக்கும் புகைச்சல் மேலும் அதிகரித்திருப்பதாக பேசப்படுகிறது.
News January 23, 2026
BREAKING: திமுகவில் இணையும் டிடிவியின் வலது கரம்

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜாவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி TTV தினகரன் அறிவித்துள்ளார். TTV தினகரன் அமமுகவை தொடங்கிய பிறகு அவருக்கு வலது கரம் போல் மிகவும் நெருக்கமாக இருந்தவர் மாணிக்கராஜா. மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்னும் சற்றுநேரத்தில் அவர் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


