News December 15, 2024
ஆதவ் அர்ஜுனா விலகல்: இறங்கி அடித்த அமீர்

விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா விலகியது குறித்து இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், தாமாகவே கட்சியில் இருந்து நீக்குவார்கள், அதிலிருந்து அரசியல் செய்யலாம் என நினைத்த செல்வந்தருக்கு, திருமாவின் கருத்து அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அதனால் தானாகவே கட்சியில் இருந்து விலகி விட்டார். எதுவாயினும். விசிகவை வீழ்த்த நினைத்த சதி விலகியதே நன்று என அமீர் கூறியுள்ளார்.
Similar News
News March 5, 2026
காங்., ராஜ்யசபா வேட்பாளர் அறிவிப்பு

திமுக கூட்டணியில் காங்., ராஜ்யசபா வேட்பாளராக அகில இந்திய காங்., செயலாளர் <<19300451>>கிறிஸ்டோபர் திலக்<<>> அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 1 ராஜ்யசபா சீட் காங்.,க்கு நேற்று ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று அவர் மனு தாக்கல் செய்யவுள்ளார். மார்ச் 16-ல் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், தேமுதிகவில் சுதீஷ் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
News March 5, 2026
மா.செ.க்களிடம் தனித்தனியாக ஆலோசித்த இபிஎஸ்

அதிமுக மா.செ.க்களை தனித்தனியாக தனது வீட்டிற்கு அழைத்து EPS ஆலோசனை நடத்தியுள்ளார். குறிப்பாக, இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியலை மா.செ.களிடம் கொடுத்து, யார் யாருக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கலாம் என்பது குறித்து கருத்துகளை கேட்டிருக்கிறார். மேலும், தெருமுனை கூட்டணிகளை நடத்துவதோடு, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து, திமுகவிற்கு எதிரான கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்லவும் அறிவுறுத்தியிருக்கிறார்.
News March 5, 2026
ராஜ்யசபா வேட்பாளராக அன்புமணி போட்டி

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 சீட் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பாமக வேட்பாளராக அன்புமணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றே வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், காலை 10.30 மணிக்கு அவர் வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் அன்புமணி ராஜ்யசபா MP-யாக இருந்துள்ளார். 2004-ல் திமுக கூட்டணியில் MP & மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.


