News October 1, 2025
டெல்லி சென்றார் ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றுள்ளார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தனது வழக்கறிஞர்கள் குழுவோடு அவர் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவர் தேசிய விளையாட்டு போட்டிகள் காரணமாக டெல்லி சென்றதாக தவெக தரப்பில் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய ட்வீட் தொடர்பாக அவர் கைதாவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் டெல்லி சென்றுள்ளார்.
Similar News
News October 2, 2025
2 குழந்தைகளுக்கு எமனாக மாறிய இருமல் சிரப்

ராஜஸ்தானில் இருமல் சிரப் (dextromethorphan hydrobromide) குடித்த 2 குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, 10-க்கு மேற்பட்ட குழந்தைகள் தீவிர பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். புகாரை தொடர்ந்து மருந்தில் தவறில்லை என நிரூபிக்க சிரப்பை குடித்த டாக்டரும் மயங்கி விழுந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மருந்து நிறுவனமான கெய்சன் பார்மா மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
News October 2, 2025
Sports Roundup: முதலிடத்தை இழந்த ஹர்திக் பாண்ட்யா

*ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப், 400 மீ ப்ரீஸ்டைலில் இந்தியாவின் பவ்யா சச்தேவா வெண்கலம் வென்றார். *200மீ பட்டர்ஃபிளை பிரிவில் சஜன் பிரகாஷுக்கு வெண்கலம் கிடைத்தது. *100மீ பேக்ஸ்ட்ரோக் பிரிவில் ஸ்ரீஹரி நடராஜ் வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். *ஐசிசி டி20 ஆல் ரவுண்டர் தரவரிசையில் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தை இழந்தார். * ஜூனியர் WC துப்பாக்கி சுடுதல், 25மீ பிஸ்டல் பிரிவில் தேஜஸ்வனி வெள்ளி வென்றார்.
News October 2, 2025
‘பைசன்’ ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் இதோ..

‘பைசன்: காளமாடன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை நடிகர் துருவ் விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பள்ளி சீருடையில், செம்மண் மேட்டில், சக இளவட்டங்களுடன் துருவ் இருக்கும் அப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மழை பொழிந்து வருகின்றனர். அதேபோல், அப்படத்தின் அடுத்த பாடலான ‘தென்நாடு’ நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.