News January 31, 2025
தவெகவில் 3ஆவது முக்கிய நபராகும் ஆதவ் அர்ஜுனா

தவெகவில் ஆதவ் அர்ஜுனாவுக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு பிறகு கட்சியில் 3ஆவது முக்கிய நபராக ஆதவ் அர்ஜுனா உருவெடுக்க உள்ளார். தேர்தல் பிரச்சாரம், தேர்தல் களப்பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகவுள்ளது.
Similar News
News March 2, 2026
UAE மீதான தாக்குதலுக்கு PM மோடி கண்டனம்

UAE மீது ஈரான் டிரோன் தாக்குதலை தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமதுடன் PM மோடி உரையாடியுள்ளார். இந்த கடினமான நேரத்தில் UAE உடன் இந்தியா துணை நிற்கும் என்றும், தாக்குதலில் இறந்தவர்களுக்கு தனது இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள அவர், UAE-ல் உள்ள இந்தியர்களை பத்திரமாக காப்பதற்காக ஷேக் முகமதுக்கு நன்றியும் கூறியுள்ளார்.
News March 2, 2026
CINEMA 360°: வசூல் மழையில் ‘தாய்கிழவி’

*ராதிகாவின் ‘தாய்கிழவி’ 3 நாள்களில் ₹10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் *ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2′ படத்தின் முதல் பாடல் மார்ச் 4-ம் தேதி ரிலீசாகிறது *’பெத்தி’ படத்தின் டப்பிங் பணிகளை ராம்சரண் தொடங்கியுள்ளார் *ரீ-ரிலீஸில் விஜய்யின் ‘தெறி’ ₹90 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் *பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து பிரகாஷ் ராஜ் விலகியுள்ளார்
News March 2, 2026
சசிகலாவின் காலம் முடிந்துவிட்டது: காங்கிரஸ் MP

சசிகலா புதிய கட்சி தொடங்கியுள்ள நிலையில், அவருக்கு எந்தவித மக்கள் ஆதரவும் கிடையாது என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு காலத்தில் அதிமுகவில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருந்தது உண்மைதான், ஆனால் தற்போது அவரது காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்தார். மேலும் சசிகலாவுடன் பயணித்த டிடிவி தினகரன் தற்போது எங்கு இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் பேசியுள்ளார்.


