News January 11, 2025
கூடுதல் கட்டணமா… உடனே இந்த நம்பருக்கு அழைக்கவும்

பொங்கல் பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களை 1800-425-6151 ( Toll Free Number) மற்றும் 044-24749002, 044 -26280445, 044-26281611ஆகிய எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம். அதேபோல், அரசு பேருந்து இயக்கம் குறித்து, 9445014436 என்ற தொலைபேசி எண்ணில் (24 ×7) மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News January 16, 2026
படத்தை பார்த்து விவகாரத்தை கைவிட்ட தம்பதி!

பொங்கலுக்கு வெளியான சிரஞ்சீவியின் ‘மன சங்கர வர பிரசாத் காரு’, ₹190 கோடி வசூலித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தை பார்த்த ஒரு தம்பதி, அவர்களின் Divorce-யே கைவிட்டுள்ளனராம். ‘அம்மா சென்டிமென்ட்’ காட்சிகளை கண்டு மனம் மாறி மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனராம். இந்த தகவலை சிரஞ்சீவி நெகிழ்ச்சியுடன் பகிர, நெட்டிசன்கள் ஒருபக்கம் ஆதரவாகவும், மறுபக்கம் கிண்டலும் செய்து வருகின்றனர்.
News January 16, 2026
சற்றுமுன்: செங்கோட்டையன் தரப்பு அதிர்ச்சி

தவெகவில் விஜய், புஸ்ஸி ஆனந்திற்கு அடுத்த இடத்தில் செங்கோட்டையன் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் பொது மேடைகளில் பேசி வருகின்றனர். ஆனால், சற்றுமுன் <<18871253>>விஜய் வெளியிட்ட பிரசார பணிக்குழுவில்<<>> செங்கோட்டையன் பெயர் ஆதவ் அர்ஜுனாவின் பெயருக்கு அடுத்ததாக இடம் பெற்றது சர்ச்சையாகியுள்ளது. பிரசார கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கே வழிகாட்டியவரை மட்டுப்படுத்துகிறாரா விஜய் என ஒருசாரார் கேள்வி எழுப்புகின்றனர். உங்கள் கருத்து?
News January 16, 2026
திமுக அரசின் கொள்ளைத் திட்டம்: அன்புமணி

1553 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் ₹9.50 வரை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்ற திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவது மின்வாரியத்திற்கு இழப்பையே ஏற்படுத்தும். எனவே, சந்தை சராசரி விலையை கணக்கிட்டு, அதற்கும் குறைவான விலையிலேயே மின்சாரத்தையும் வாங்க ஆணையிட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


