News October 25, 2024
பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தவெக

எம்.பி தேர்தலுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம், அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த பட்டியலில் தமிழக வெற்றிக் கழகம் இடம்பெற்றுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் என்ற முகவரியில் தவெக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 21, 2026
இனி ரயில்வே ஸ்டேஷன்களில் ₹14 தான்!

ரயில்வே ஸ்டேஷன்களில் ‘<<17789708>>ரயில் நீர்<<>>’ 1 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் ₹14-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், விற்பனையாளர்களிடம் ‘ரயில் நீர்’ பாட்டில்கள் காலியானால், மற்ற தண்ணீர் பாட்டில்களையும்(Aquafina, Bisleri) ₹14-க்குதான் விற்க வேண்டும் என தற்போது IRCTC உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அதிக விலைக்கு விற்பனை செய்தால், 139 என்ற ரயில்வே உதவி எண்ணில் புகார் அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
News January 21, 2026
BREAKING: ஒரே நாளில் விலை தாறுமாறாக மாறியது

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு இரண்டே நாள்களில் ₹6,400 வரை உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதேநேரம், நேற்று புதிய உச்சம் தொட்ட வெள்ளி விலை இன்று மாற்றம் ஏதும் இல்லாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இதன்படி, 1 கிராம் வெள்ளி ₹340-க்கும், 1 கிலோ ₹3.40 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. வரும் நாள்களிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
News January 21, 2026
டெலிட் ஆன PHOTO, VIDEO-வை இப்படி Recover செய்யலாம்

உங்கள் ஃபோனில் டெலிட் ஆன போட்டோ, வீடியோக்களை இந்த ஒரு சீக்ரெட் APP-ஐ வைத்து Recover செய்யலாம். DiskDigger, Dr.Fone, Dumpster ஆகிய செயலிகளில் ஏதேனும் ஒன்றை டவுன்லோடு செய்யுங்கள். அதில் காட்டும் DEEP SCAN ஆப்ஷனை க்ளிக் செய்தால், நீங்கள் டெலிட் செய்த போட்டோ, வீடியோக்கள் காட்டும். அதில் தேவையானவற்றை Recover செய்யலாம். இதன்மூலம் 60% போட்டோ, வீடியோக்களை உங்களால் திரும்ப பெறமுடியும். SHARE.


