News October 25, 2024
தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேர் சேர்ப்பு: பாஜக

தமிழகத்தில் புதிதாக 50 லட்சம் பேரை தங்கள் கட்சியில் உறுப்பினர்களாக இந்தாண்டில் சேர்த்து இருப்பதாக பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தமிழக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பெரும் திரளாக நேரடியாகவும், இணையதளம் வாயிலாகவும் பதிவு செய்து கட்சியில் உறுப்பினராக சேர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 3, 2026
FLASH: வெனிசுலா அதிபர் சிறை பிடிப்பு

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் சிறை பிடித்து நாடு கடத்திவிட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க அரசியல் சாசனம் மற்றும் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு, <<18750130>>வெனிசுலா மீது தாக்குதல்<<>> நடத்தப்பட்டதாகவும், சில மணி நேரங்களிலேயே மதுரோ சிறைபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெனிசுலா தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
News January 3, 2026
இந்த காய் சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!

காய்கறிகள் சாப்பிடுவதால் உங்கள் உயிரே போகலாம் என சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், முட்டைகோஸ், கத்திரிக்காய், காலிஃபிளவர், கீரை போன்ற காய்கறிகளில் இருக்கும் நாடபுழுக்கள் தற்போது அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனை சரியாக கழுவாமல் சாப்பிட்டால், புழுக்கள் ரத்த ஓட்டத்தில் கலந்து, மூளைக்கு சென்றடையும். பிறகு, வலிப்பு, தலைவலியில் தொடங்கி உயிரையே பறிக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். SHARE.
News January 3, 2026
அரசு ஊழியர்களுக்கு ஸ்டாலின் அளித்த பொங்கல் பரிசு

அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் (TAPS) குறித்து CM ஸ்டாலின் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு உண்மையாக இருக்கும் என மீண்டும் ஒருமுறை செய்து காட்டியுள்ளோம் எனத் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரும் புத்தாண்டு, பொங்கல் பரிசாக <<18749969>>TAPS<<>> அறிவிப்பினை வெளியிட்டுள்ளோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


