News June 21, 2024
காலை உணவில் இதை சேர்த்துக்கோங்க

மனித வாழ்வில் இன்றியமையாத காலை உணவை, எளிதில் ஜீரணமாகும் வகையில் சாப்பிடுவது செரிமான மண்டலம் தனது செயல்பாட்டை மென்மையாகத் தொடங்க வழிவகுக்கும். அந்த வகையில் பப்பாளி, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், பீட்ரூட், ஆப்பிள், ப்ராக்கோலி ஆகியவற்றை காலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், சகல பிரச்னைகளில் இருந்தும் விடுபடலாம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
Similar News
News September 12, 2025
ஸ்டாலின் குடும்பத்தில் மரணம்.. தலைவர்கள் இறுதி அஞ்சலி

CM ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் <<17674558>>தந்தை வேதமூர்த்தியின்<<>> உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் சற்றுமுன் தகனம் செய்யப்பட்டது. நேற்று மாலை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள வீட்டிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய CM ஸ்டாலின் இன்று மயானத்திற்கு நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். மேலும், DCM உதயநிதி, கனிமொழி, அமைச்சர்கள், வீரமணி, கமல்ஹாசன் வைகோ, திருமா உள்ளிட்ட தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
News September 12, 2025
EMI-யில் அதிகவிலை கொடுத்து Expensive போன் வாங்குறீங்களா?

Iphone வைத்திருப்பது தான் கெத்து, ஸ்டேட்டஸ் என்ற மனநிலைக்குள் பலரும் சிக்கியுள்ளனர். அதற்காக, கண்மூடித்தனமாக அதிக வட்டிக் கொண்ட EMI எடுக்கவும் பலரும் தயங்குவதில்லை. இந்தியாவில் வாங்கப்பட்ட 4-ல் 1 ஐபோன் EMI-ல் தான் வாங்கப்படுகிறதாம். இந்த போனுக்கு செலவு செய்யும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து எதிர்காலத்தை பாதுகாக்கலாமே என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News September 12, 2025
நேபாளத்தின் நிலைக்கு காங்கிரஸே காரணம்: BJP

நேபாளம், இந்தியாவுடன் இருந்திருந்தால், அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியிருக்கும் என பிஹார் DCM சாம்ராட் செளத்ரி கூறியுள்ளார். நேபாளத்தை காங்., இந்தியாவிலிருந்து பிரித்ததே, தற்போதைய நேபாளத்தின் அசாதாரண நிலைக்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிஹார் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு சாம்ராட், அண்டை நாடுகளுக்கு சென்று, புராண தவறுகளை சரிசெய்யலாம் என காங்., தலைவர் பவன் கேரா விமர்சித்துள்ளார்.