News December 5, 2024
கடற்படைக்கு ட்ரோன் வழங்கிய அதானி நிறுவனம்!

அதானி டிபன்ஸ் & ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த ‘Drishti-10 Starliner’ ஆளில்லா சிறிய ரக விமானம் உளவுப்பணிக்காக இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ‘Elbit Hermes 900’ ட்ரோனுக்கு இணையான இது 100% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. நேட்டோவின் சான்றிதழ் பெற்றுள்ள இந்த ட்ரோன் 450 Kg ஆயுதங்களை சுமந்து, 36 மணிநேரம் இடைவிடாமல் 30,000 அடி உயரம் வரை பறக்கும் திறனுடையது.
Similar News
News September 17, 2025
ஆயுதங்களை ஒப்படைக்க தயார்: மாவோயிஸ்ட் அறிவிப்பு

நிபந்தனையுடன் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று அமித்ஷாவுக்கு மாவோயிஸ்ட் இயக்கம் கடிதம் எழுதியுள்ளது. ஆபரேஷன் ககர் நடவடிக்கை மற்றும் என்கவுன்ட்டர்களை உடனடியாக நிறுத்தினால் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மார்ச்சுக்குள் மாவோயிஸ்ட்களை முற்றிலும் ஒழிக்க அமித்ஷா காலக்கெடு நிர்ணயித்த நிலையில், மாவோயிஸ்டுகளின் அறிவிப்பு பாதுகாப்பு படைகளுக்கு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.
News September 17, 2025
திமுகவுக்கு ஜாக்பாட்? டெல்லி ஆலோசனையின் பின்னணி

டெல்லியில் அமித்ஷாவை EPS சந்தித்த அதே நேரத்தில், கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கொங்கு பகுதியை திமுக குறிவைத்திருக்கும் நிலையில், அங்குள்ள அதிமுக தலைவர்களுக்கு இடையேயான உரசல் திமுகவுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் பாஜக தலைமை கவனமாக உள்ளதாக கூறப்படுகிறது.
News September 17, 2025
நல்ல தூக்கம் தரும் உணவுகள் PHOTOS

நல்ல தூக்கம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. ஆனால், இதுதான் பலருக்கும் இன்று பெரும் பிரச்னையாக உள்ளது. உடல்பயிற்சி, ரிலாக்சேஷன் பயிற்சிகள் போன்றவை தூக்கத்துக்கு உதவும். இத்துடன் சில உணவுகளையும் அன்றாடம் சேர்த்துக் கொள்வது இயல்பான நல்ல தூக்கத்தை தரும். அந்த உணவுகளை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை swipe செய்து பாருங்கள். வேறு யோசனைகள் உங்களுக்கு தெரிந்தால் கமென்ட்டில் சொல்லுங்க.