News August 30, 2024

₹50 கோடி கேட்டு நடிகை வழக்கு

image

லேண்ட் ரோவர் நிறுவனத்திடம் 50 கோடி நஷ்ட ஈடு கேட்டு ‘தூம்’ பட நடிகை நிமி சென் வழக்கு தொடர்ந்தார். 2020இல் வாங்கிய தனது கார் அடிக்கடி பழுதாவதாகவும், காரின் சன்ரூஃப், சவுண்ட் சிஸ்டம், கேமரா உள்ளிட்டவை சரியாக செயல்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். கார் நிறுவனம் இது தொடர்பாக முறையாக விளக்கமளிக்கவில்லை என்றும், தனது காரை மாற்றிக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News July 8, 2025

போலி லிங்க்..! க்ளிக் செய்தால் பணம் காலி: போலீஸ்

image

போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக அபராதம் வசூலிப்பதிலும் மோசடி கும்பல் கைவரிசை காட்ட தொடங்கியிருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். பொதுவாக அபராத விவரம் வாட்ஸ் அப் அல்லது SMS வழியாக வரும். நம் பணத்தை அதிகாரப்பூர்வ ஆப்-களில் செலுத்துவோம். ஆனால் மோசடி கும்பல் பணத்தை செலுத்த APK அப்ளிகேஷன் லிங்கை அனுப்புவார்கள். அதனை க்ளிக் செய்தால் அடுத்தடுத்த கட்டங்களில் பணத்தை இழப்போம் என எச்சரிகின்றனர்.

News July 8, 2025

திருச்செந்தூருக்கு 5 லட்சம் பக்தர்கள் வருகை: சேகர் பாபு

image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நிகழ்வுக்கு பின் பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, சுமார் 5 லட்சம் பக்தர்கள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலுக்கு வருகை தந்ததாகவும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் கூறினார். திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல என்றார்.

News July 8, 2025

அரசு கல்லூரிகளில் 20% கூடுதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர்

image

அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார். உயர்கல்வியில் சேர திரளான மாணவர்கள் காத்திருக்கிறார்கள் என அறிந்த CM ஸ்டாலின், அரசு உதவி பெறும் கலை & அறிவியல் கல்லூரிகளில் 15 சதவிகிதமும், சுயநிலை கலை & அறிவியல் கல்லூரிகளில் 10 சதவிகிதமும் கூடுதலாக உயர்த்த உத்தரவிட்டிருக்கிறார் என கோவி.செழியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!