News April 27, 2025
நடிகை செளந்தர்யா மரணம்… கிடைக்காத சடலம்

பொன்னுமணி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி பிறகு, ரஜினியின் அருணாச்சலம், படையப்பா, விஜயகாந்தின் தவசி, சொக்கத்தங்கம் என பல வெற்றி படங்களில் நடித்தவர் செளந்தர்யா. பெங்களூரு அருகே கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி விமான விபத்தில் பலியானார். அப்போது அவரின் வயது 32 மட்டுமே. ஆனால் 21 ஆண்டுகளாகியும், அவர், அவருடன் பயணித்தோரின் சடலங்கள் கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது.
Similar News
News April 27, 2025
பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி காலமானார்

ஹாலிவுட் நடிகர் பிலிப் லோரி (88) காலமானார். வயது மூப்பின் காரணமாக அவர் காலமானார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு டிவி தொடரின் கதாபாத்திரத்தில் நீண்ட காலம் நடித்தவர் என்ற கின்னஸ் சாதனை இவரையே சேரும். ஹாலிவுட்டில் மிக பிரபலமான ‘Coronation Street’ சீரியலில் 1960-1968 வரை டெனிஸ் டேனராக நடித்தவர், பிறகு மீண்டும் அதே கதாபாத்திரத்தில் 2011 முதல் இறக்கும் வரை நடித்துள்ளார். #RIP.
News April 27, 2025
IPL: MI முதலில் பேட்டிங்

மும்பையில் நடைபெறும் இன்றைய IPL போட்டியில் MI, LSG அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற LSG கேப்டன் ரிஷப் பண்ட், முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்திருக்கிறார். MI, LSG என இரு அணிகளும் முறையே, 5 & 6-வது இடங்களில் இருப்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில், DC, RCB அணிகள் மோதவுள்ளன.
News April 27, 2025
இரண்டாவது நாளாக ரோட் ஷோ

தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத் கமிட்டி முகவர்களுக்கான கருத்தரங்கை விஜய் நடத்தினர். இன்றும் இரண்டாவது நாளாக நடைபெறவுள்ள இந்த கருத்தரங்கிற்கு அவர் ஹோட்டலில் இருந்து புறப்பட்டுள்ளார். செல்லும் வழி முழுக்க, திறந்த வாகனத்தில் விஜய் தொண்டர்களை சந்தித்தபடியே செல்கிறார்.