News April 18, 2024
நடிகை சம்யுக்தாவின் ‘ஆதி சக்தி’

‘வாத்தி’ திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். ராம நவமியை முன்னிட்டு அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், ‘ஆதி சக்தி’ பிறந்த நாளில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புனிதமான முயற்சியாக இதைத் தொடங்குகிறேன். இந்தப் புனிதமான பயணம் குறித்த கூடுதல் தகவலை விரைவில் பகிர்கிறேன் எனக் கூறியுள்ளார்.
Similar News
News April 4, 2026
தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 குறைந்தது

போர்ச் சூழல் காரணமாக தங்கத்தின் விலை கடந்த 1 மாதமாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் மார்ச் 1 முதல் தற்போது வரை தங்கம் விலை சவரனுக்கு ₹15,000 வரை குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்ட 1 சவரன் தங்கம், இன்றைய நிலவரப்படி ₹1,11,600-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், ஏப்ரல் தொடங்கிய பிறகு <<19562286>>தங்கம் விலை<<>> மெல்ல மெல்ல அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
News April 4, 2026
BREAKING: முடிவை மாற்றும் திருமாவளவன்?

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முடிவை திருமாவளவன் மறுபரிசீலனை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே களமிறங்குவதாக அவர் அறிவித்திருந்தார். ஆனால், தற்போதுவரை திருமாவளவன் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், அவருக்கு பதிலாக விசிக அமைப்புச் செயலாளர் இளமாறன் போட்டியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.
News April 4, 2026
கேஸ் சிலிண்டர்.. அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், பெட்ரோலிய பொருள்கள், கேஸ் சிலிண்டர்களை பதுக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்களை தண்டிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் சிலிண்டர் விநியோகம் சீராக உள்ளதா?


