News July 1, 2024
‘தளபதி-69’ல் நடிகை சமந்தா?

நடிகர் விஜய் தற்போது ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இவரது அடுத்த படத்தை எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கத்தி, தெறி மற்றும் மெர்சல் என இதற்கு முன் 3 படங்களில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இந்த கூட்டணி தற்போது மீண்டும் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Similar News
News November 18, 2025
இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு திமுக மறுப்பு

SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதில் குழப்பம் உள்ளதால், இதுதொடர்பாக ECI விளக்கமளிக்க வேண்டும் என்று திமுக சட்ட செயலாளர் என்.ஆர்.இளங்கோ வலியுறுத்தியுள்ளார். SIR கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், திமுக பூத் லெவல் ஏஜெண்ட்டுகளுக்கு மட்டும் கணக்கீட்டு படிவம் வழங்கப்படுவதாக EPS சொல்வது தவறான தகவல் என்றும் மறுத்துள்ளார்.

PAK-ன் 255 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள்கள், ஆயுதங்களை கடத்தி வருவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் கூட, இப்படியொரு குற்றச்சாட்டில் விஷால் பச்சார் என்பவரை <<18300589>>NIA <<>>கைது செய்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் மட்டும், பாகிஸ்தானின் 255 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக BSF தெரிவித்துள்ளது. மேலும், தற்போது மூடுபனி காலம் என்பதால், எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.